மனைவியை கொலைசெய்துவிட்டு நாடகமாடிய கணவன்! வெளியான அதிர்ச்சி காரணம்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

மனைவியை கொலைசெய்துவிட்டு நாடகமாடிய கணவன்! வெளியான அதிர்ச்சி காரணம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒருபக்கம் அதிகரிக்கும் அதே நேரத்தில் இன்றுவரை வரதட்சணை கொடுமைகளும் மற்றொரு பக்கம் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

சட்டிஸ்கர் மாநிலம் முன்கேலி மாவட்டத்தில் உள்ள பொண்டாரா என்ற கிராமத்தில் வரதட்சணையாக இருசக்கர வாகனம் வாங்கிவர மறுத்த மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொலைசெய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட கொலையாளி தனது மனைவியிடம் தனக்கு வரதட்சணையாக கொடுக்கவேண்டிய இருசக்கர வாகனத்தை வீட்டில் இருந்து வாங்கி வருமாறு மனைவியுடன் அடிக்கடி தகாரில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர் தங்களால் தற்போது இருசக்கர வாகனம் வாங்கித்தர முடியாது என்று மகளிடன் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை கொலை செய்துவிட்டு, அந்த கொலையை மறைக்க அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். மேலும், தனது உறவினர்களிடம் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறி நாடகமாடியுள்ளார். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு , தற்போது கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo