வரதட்சணை கொடுமை... கர்ப்பிணி காதல் மனைவியை கழுத்தறுத்து படுகொலை செய்த கணவன்... கொடூர சம்பவம்.!

வரதட்சணை கொடுமை... கர்ப்பிணி காதல் மனைவியை கழுத்தறுத்து படுகொலை செய்த கணவன்... கொடூர சம்பவம்.!


dowry-cruelty-the-husband-who-strangled-his-pregnant-lo

வரதட்சணை கேட்டு தனது காதல் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தப்பியோடிய கணவனை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள சாமலாப்பூர் உண்டி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரும் சுபா என்ற பெண்ணும் காதலித்து கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் சுபா மீண்டும் கர்ப்பமாக இருந்ததால் தனது தாய் வீட்டில் இருந்திருக்கிறார்.

Indiaஇவர்களது திருமணம் காதல் திருமணமாக இருந்தாலும் மஞ்சுநாத் அடிக்கடி சுபாவிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மனைவி கர்ப்பமாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதன் மூலம் தனது மாமனாரிடமிருந்து வரதட்சணை வாங்க முயன்றிருக்கிறார் மஞ்சுநாத். இது தொடர்பாக கணவன் மற்றும் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Indiaஅப்போது ஆத்திரமடைந்த மஞ்சுநாத் கையில் இருந்த பிளேடை எடுத்து தனது மனைவியின் கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் சுபாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் கர்ப்பிணி சுபா. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மஞ்சுநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணிப் பெண் காதலனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.