இந்தியா

அட கடவுளே.. அதிகரிக்கும் கழுதை இறைச்சி விற்பனை.. வேகமாக குறையும் கழுதைகளின் எண்ணிக்கை..

Summary:

ஆந்திராவில் வேகமாக அதிகரித்துவரும் கழுதை இறைச்சி விற்பனையால் அங்கு கழுதைகளின் எண்ணிக்கை வே

ஆந்திராவில் வேகமாக அதிகரித்துவரும் கழுதை இறைச்சி விற்பனையால் அங்கு கழுதைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்துவருகிறது.

மனிதர்களின் உணவு முறைகளில் இறைச்சிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஆடு, மாடு, கோழி, மீன் என ஆரம்பித்து பலவிதமாக இறைச்சிகளை உலகம் முழுவதும் மனிதர்கள் உண்டுவருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் தற்போது கழுதை இறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

கழுதை இறைச்சியை உண்டால், வலிமையும், வீரியமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையே அங்கு கழுதை இறைச்சி மீதான தட்டுப்பாடு அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. ஆந்திராவின் கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, பிரகாசம், குண்டுர் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்ட விரோதமாக கழுதை இறைச்சி விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

கழுதை இறைச்சி பயன்பாடு திடீரென அதிகரித்துள்ளதால், அங்கு கழுதைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் இருந்து கழுதைகள் இறைச்சிக்காக கொண்டுவரப்படுகின்றன.

கழுதையை இறைச்சிக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் என கூறியுள்ள அதிகாரிகள் , அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.


Advertisement