"என் கணவர் நோயாளியாய் மாறிவிட கூடாது" கொரோனா பணியில் இருக்கும் மருத்துவரின் மனைவி உருக்கம்!

"என் கணவர் நோயாளியாய் மாறிவிட கூடாது" கொரோனா பணியில் இருக்கும் மருத்துவரின் மனைவி உருக்கம்!


Doctors wife in corono ward emotional speech

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளை காப்பாற்ற மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மூச்சுக் காற்று பட்டாலே பரவும் வல்லமை கொண்ட கொரோனா வைரஸினை குணப்படுத்த முயற்சி செய்யும் மருத்துவர்களின் மனநிலையினை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். இதிலும் வீட்டிற்கே செல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கி பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

Corono ward

இந்தியாவில் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ள மஹாராஷ்டிராவில் பல மருத்துவர்கள் நீண்ட நாட்களாகவே வீட்டிற்கு செல்லாமல் பணிபுரிகின்றனர். அவர்களில் நாக்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிகிறார் மருத்துவர் சூசந்த் முல்லே.

அவர் குறித்து பேசியுள்ள அவரது மனைவி, "என் கணவர் எங்களை பார்க்க கடந்த 15 நாட்களாகவே வீட்டிற்கு வரவில்லை. தினமும் இரவில் எங்கள் மகன் அப்பாவை பற்றி கேட்கும்போதெல்லாம் வீடியோ காலில் பேசி அப்பா வேலையில் இருக்கிறார் எனக் கூறி சமாதானம் செய்கிறேன். மேலும் மருத்துவராக இருக்கும் என கணவர் நோயாளியாய் மாறிவிட கூடாது என்று இறைவனிடம் தினந்தோறும் வேண்டுகிறேன்" என உருக்கமாக கூறியுள்ளார்.