இந்தியா மருத்துவம் லைப் ஸ்டைல்

29 வயது இளைஞரின் வயிற்றில் ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

Doctors remove uterus from 29 years old mumbai man

மருத்துவ துறையில் பல சமயங்களில் வினோதமான நிகழ்வுகள் நடப்பது வழக்கமான ஓன்று. அதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இது. மும்பையை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் குழந்தை இன்மை காரணமாக மருத்துவமனையை அணுகியுள்ளார்.

இதனால் இளைஞரின் விந்தணுவை எடுத்து அதில் இருக்கும் உயிரணுக்களை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். பரிசோனையின் முடிவில் விந்தணுவில் துளிகூட உயிரணுக்கள் இல்லாமல் இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

பொதுவாக விந்தணுவில் உயிரணுக்கள் குறைவாக இருக்கலாம். ஆனால், துளிகூட உயிரணுக்கள் இல்லாமல் இருக்க சாத்தியமே இல்லை என்பதால் இதுகுறித்து ஆய்வில் இறங்கினர் மருத்துவர்கள். ஆராயச்சியின் முடிவில் மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த இளைஞரின் அடிவயிற்றில் ஸ்கேன் செய்தபோது பெண்களுக்கு இருப்பதுபோல கர்ப்ப பையும், கர்ப்பப்பை குழாயும் அந்த இளைஞருக்கு இருந்துள்ளது. உடனே அறுவை சிகிச்சைமூலம் இரண்டையும் மருத்துவர்கள் அகற்றியுள்னனர். இனி அந்த இளைஞருக்கு உயிரணுக்கள் உற்பத்தியாகி குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement