
Doctor Priyanka murder case update
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நேரத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
வேண்டுமென்றே ப்ரியங்கவின் பைக்கை பஞ்சர் செய்துவிட்டு நான்குபேர் கொண்ட கும்பல் பிரியங்காவை கற்பழித்து கொலை செய்து பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்னனர். இந்நிலையில் போலீசாரால் கைதுசெய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளில் ஒருவனான முகமதுவின் பெற்றோர் சில விசயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.
அதில், சம்பவத்தன்று தங்கள் மகன் நள்ளிரவு 1 மணிக்கே வீட்டிற்கு வந்ததாகவும், ஒரு ஸ்கூட்டி மேல, லாரி மோதி ஆக்சிடண்ட் ஆகிடுச்சு. அதனால்தான் வர லேட்ன்னு சொல்லிட்டு தூங்க போனதாகவும் தெரிவித்துள்னனர்.
மேலும், பிரியங்காவை எரிச்சு, கற்பழிச்சு கொன்னதா போலீஸ் தங்கள் மகனை கைது செஞ்சப்போ முதலில் எங்களுக்கு எதுவும் புரியல. முகமதுவோட கைது ஆகிருக்க மற்ற மூணுபேரும் அடிக்கடி அவனைத்தேடி வீட்டுக்கு வருவாங்க. என கூறிஉள்ளன்னர்.
தங்கள் மகன் நல்லவனாகத்தான் இருந்ததாகவும், ஒருவேளை அவன் இந்த குற்றத்தை செய்திருந்தால் அவன் செய்த முதல் தவறு இதுவாகத்தான் இருக்கும் எனவும் முகமதுவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement