தனது குழந்தை உயிருக்கு ஆபத்தாக இருந்த சூழலிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிட்சை வழங்கிய மருத்துவர்.! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!

தனது குழந்தை உயிருக்கு ஆபத்தாக இருந்த சூழலிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிட்சை வழங்கிய மருத்துவர்.! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!


Doctor father treating corono patients even her child in end stage

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக போராடிவருகிறது. மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் அனைவரும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நேரடியாக களத்தில் இறங்கி போராடிவருகின்றனர்.

இந்நிலையில், தனது 15 மாத பெண் குழந்தை உயிருக்கு போராடி உயிர் இழந்த நிலையில், குழந்தையின் இறுதி நிமிடங்களில் கூட தந்தை குழந்தையின் அருகில் இல்லாமல் கொரோனாவுக்கு சிகிச்சை வழங்க சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் தேவந்திர மெக்கா. இந்தூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிவரும் இவரது 15 மாதக் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனது.

குழந்தை இறக்கும்போது கூட அதன் கூட இல்லாத மருத்துவர் ஹோசங்காபாத் கூறுகையில், எனதுமகள் ஹைட்ரேசோபாலஸ் என்னும் நோயாள் பாதிக்கப்பட்டு இருந்தாள். இந்த இக்கட்டான நேரத்தில் எனது சேவை தேசத்துக்குத் தேவை என்பதை உணர்ந்திருந்தேன். அதனால்தான் கொரோனா வார்டில் பணியைத் தொடர்ந்தேன். என் மகள் இறந்ததால் வீட்டில்போய் பார்ப்பதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.