இந்தியா மருத்துவம்

அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்! அதிர்ச்சி காரணம்!

Summary:

doctor commit suicide


மும்பையில் உள்ள தீபவாலா மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் பயல் என்ற இளம் பெண் மருத்துவர் கடந்த 22ம் தேதியன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவத்தன்று காலையில் இரண்டு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு விடுதிக்கு சென்ற பயல், நீண்ட நேரம் கதவை திறக்காமல் இருந்துள்ளார். கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனையடுத்து பயலின் உடலை மீது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனேவே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பயலின் தாய் தற்கொலைக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது என்னுடைய மகள் இடஒதுக்கீட்டின் மூலமாக தான் மருத்துவ சீட்டு பெற்றார். அதனை வைத்து மூன்று மூத்த பெண் மருத்துவர்கள் சித்ரவதை செய்வதாக எங்களிடம் கூறினாள். நாங்களும் அவர்கள் தங்கியிருக்கும் விடுதி பாதுகாப்பாளரிடம் ஏற்கனவே புகார் அழைத்திருந்தோம். இதனால் அவர்கள் மூன்று பேரையும் அழைத்து இனிமேல் இதுபோன்று நடந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்.


இந்தநிலையில் கடந்த 22ஆம் தேதியன்று மதியம் நான் என்னுடைய மகளுக்கு போன் செய்தேன். இன்னும் அவளுடைய சீனியர்கள் சாதி பெயரை சொல்லி சித்ரவதை செய்வதாக என்னிடம் வேதனை தெரிவித்தாள். நானும் தந்தையும் உடனடியாக மும்பைக்கு கிளம்பி வந்து, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் புகார் கொடுப்பதாக அவளிடம் கூறினேன். ஆனால் அதற்குள் பயல் இந்த முடிவை எடுத்துவிட்டால் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், புகார் அளிக்கப்பட்ட மருத்துவர்கள்  மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement