இந்தியா

கொரோனா வார்டில் திடீர் பரபரப்பு..! 20 வயது இளம் பெண்ணிடம் அத்துமீறிய மருத்துவர்..! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

Doctor abused corona patient in Noida

கொரோனா வார்டில் சிகிச்சைபெற்றுவந்த 20 வயது இளம் பெண் ஒருவரிடம் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர் ஒருவர் பாலியல் கொடுமையில் ஈடுபட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோய்டாவை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையின் ஆண்கள் வார்டில் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்நிலையில் அந்த இளம் பெண்ணின் அறைக்குள் புகுந்த அந்த மருத்துவர் வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த சக நோயாளிகள் அந்த பெண்ணை அந்த மருத்துவரிடம் இருந்து காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் அந்த பெண்ணை பாலியல் கொடுமை செய்யவில்லை எனவும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு மருத்துவர்தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவரை விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement