இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டது எந்த மாநிலம் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டது எந்த மாநிலம் தெரியுமா?


Do you know which state is more affected by the corona

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கி இன்று பல நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது கொரோனா வைரஸ். இதுவரை இந்நோயால் உலகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 42, 000க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் 15-ம் தேதிவரை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

KERALA

இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸால் இதுவரை 1300க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் கேரளா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கேரளா மாநிலத்தில் மட்டும் 230க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் கேரளா முதல் இடம் பிடிக்க மகாராஷ்டிர மாநிலம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.