ஆன்லைன் கிளாஸ்க்கு நோ சொல்லி பிரதமருக்கு கடிதம் எழுதிய கிராமப்புற மாணவன்.!

ஆன்லைன் கிளாஸ்க்கு நோ சொல்லி பிரதமருக்கு கடிதம் எழுதிய கிராமப்புற மாணவன்.!



Do not want online class

தற்போது நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க முடியாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்க ஆரம்பித்து விட்டன.

அதேபோல் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் துரை திரவியம் என்ற மாணவன் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்புக்கு முன்னேறியுள்ளான். இந்நிலையில் தற்போது அந்த சிறுவனின் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடத்தவிருப்பதாக குறுந்தகவல் ஒன்று துரை திரவியத்தின் தந்தை மொபைல் போனுக்கு வந்துள்ளது.

ஆனால் துரை திரவியம் தைரியமாக என்னால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாது என்று கூறி பிரமதர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் ஆன்லைன் வகுப்பினால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பலவித சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

Online class

மேலும் ஆன்லைன் வகுப்பினால் மாணவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள தனி லோப்டப் மற்றும் இணைய வசதிகள் தேவைப்படுகிறது. நடுத்தர மக்களால் இத்தேவைகளை பூர்த்தி செய்வது என்பது சற்று முடியாத செயலாகவே இருந்து வருகிறது.

இதனால் ஆன்லைன் வகுப்புகளை உடனே நிறுத்துவதற்கு அனைத்து மாநில முதல்வர் மற்றும் ஆளுநருக்கு உத்தரவிடுமாறு இதன் மூலம் கேட்டு கொள்கிறேன் என துரை திரவியம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு ஆதரவு தெரிவித்து அவரது தந்தையும் ஆன்ரலைன் வகுப்புகளை நிறுத்துமாறு கூறியுள்ளார்.