அடக்கொடுமையே இந்த விஷயத்திற்கெல்லாம் விவாகரத்தா? நடுஇரவில் கைக்குழந்தையுடன் அடித்து விரட்டப்பட்ட இளம்பெண்!!

அடக்கொடுமையே இந்த விஷயத்திற்கெல்லாம் விவாகரத்தா? நடுஇரவில் கைக்குழந்தையுடன் அடித்து விரட்டப்பட்ட இளம்பெண்!!


divorce-for-crying-baby

மத்திய பிரதேச மாநிலம் பார்வானி மாவட்டத்தை சேர்ந்தவர் உஸ்மா அன்சாரி .21 வயது நிறைந்த இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் உஸ்மா தனது கணவன் மற்றும் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது குழந்தை உடல்நலகுறைவு காரணமாக திடீரென தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. 

மேலும் அவர் எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சி செய்தும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த சுஷ்மாவின் கணவர் குழந்தை அழுவதால் தனது தூக்கம் கெடுகிறது என கத்தியுள்ளார்.

mutthalaq

மேலும் குழந்தையின் அழுகையை உடனே நிறுத்த முடியவில்லை என்றால் அதை கொன்றுவிடு என கோபமாக கூறியுள்ளார். இதனால் உஷ்மாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சண்டை எழுந்துள்ளது.இந்நிலையில் கணவருக்கு ஆதரவாக அவரது தந்தை மற்றும் சகோதரர் இணைத்துக்கொண்டு உஷ்மாவை கடுமையாக  பேசியுள்ளர்.

 பின்னர் மூவரும் இணைந்து கொண்டு, உஷ்மாவையும் அவரது குழந்தையும் வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளனர் மேலும் அப்பொழுதே அவரது கணவர் மூன்று முறை தலாக் என கூறி உன்னை விவாகரத்து செய்து விட்டேன் இங்கிருந்து சென்றுவிட்டு என தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த உஸ்மா குழந்தை அழுததற்காக தன்னை விவாகரத்து செய்த கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.