டிக் டாக்கில் குறிவைக்கப்படும் பெண்கள்! இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்! உஷார் மக்களே!

disadvantage of tik tok and its problems


disadvantage of tik tok and its problems

பொழுதுபோக்கு என்ற பெயரில் இன்றைய இளைய சமுதாயத்தினர் ஒருசில விஷயங்களில் வீணாக நேரத்தை செலவிடுவதோடு பல நேரங்களில் மிகப்பெரிய ஆபத்துகளிலும் சிக்கி கொள்கின்றனர். என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும், அதனுடன் சேர்த்து ஆபத்துகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

செலஃபீ என்ற பெயரில் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுப்பது, ஓடும் ரயில் முன்பு செலஃபீ எடுப்பது என எத்தனையோ உயிர்கள் பறிபோயுள்ளது. தற்போது டிக் டாக் என்னும் செயலி இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த 20 வயது கல்லூரி பெண் டிக்டாக்கில் செம ஃபேமசாம். இவர் எந்த வீடியோவை போட்டாலும் பயங்கர டிரெண்ட் ஆகிவிடுமாம். இதனால் டிக்டாக்கிற்கு அடிமையான அந்த பெண் எந்நேரமும் டிக்டாக் செயலியில் மூழ்கியிருக்கிறார். 

முதலில் இதன் ஆபத்தை உணராத அந்த இளம் பெண் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். ஆனால், சில நாட்களுக்கு முன்னர் அந்த இளம்பெண்ணின் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச இணையத்தளத்தில் பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.