புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நடிகை மேக்னா ராஜின் குழந்தைக்கு 10 லட்சம் மதிப்பிலான தொட்டில்! வாங்கி கொடுத்தது யார் தெரியுமா?
பிறக்க இருக்கும் தனது அண்ணனின் குழந்தைக்காக மறையாத நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவ சார்ஜா 10 லட்சம் மதிப்பிலான தொட்டிலை வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில் இவரது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருந்த நடிகர் மேக்னா ராஜுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கணவன் இறந்தநிலையில் அவரது பெரிய கட்டவுட் ஒன்றை அருகில் வைத்து மேக்னா தனது வளைகாப்பை நடத்தினார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் மேக்னாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க இருக்கும் நிலையில், குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி துருவ சார்ஜா சுமார் 10 லட்சம் மதிப்பிலான வெள்ளி தொட்டில் ஒன்றை வாங்கி வீட்டில் வைத்துள்ளார்.
இந்த வெள்ளி தொட்டிலின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.