
Dhoni serves with army in kashmir
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது 2 மாத ஓய்வு கேட்டு இந்திய ராணுவத்தில் தனது நேரத்தை செலவிடப்போகிறார். இதில் 15 நாட்கள் காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்ட உள்ளார்.
உலக்கோப்பை தொடருக்கு பிறகு தோனி இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து 2 மாதங்கள் ஓய்வு எடுத்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் அவர் ஏற்கனவே பதவியில் இருக்கும் துணை ராணுவ படையில் சேவை செய்ய உள்ளார்.
பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக இருந்து வருகிறார். தோனி தற்போது பெங்களூரில் இருக்கும் ராணுவ மையத்தில் ராணுவ வீரர்களுடன் வசித்து வருகிறார்.
வரும் ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காஷ்மீரில் உள்ள பாரா பட்டாலியன் ராணுவத்தினருடன் ரோந்து பணியிலும் எல்லை பாதுகாப்பிலும் ஈடுபட உள்ளார். மேலும் இந்த 15 நாட்களும் காஷ்மீரில் இருக்கும் ராணுவ வீரர்களின் முகாமில் தான் தங்கவுள்ளார்.
Advertisement
Advertisement