ரொம்ப நேரமா பூட்டியிருந்த கதவு..! யாருமே கதவ திறக்கல.. ! உள்ளே போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!delhi-young-girl-and-mother-killed-by-lover

தனது முன்னாள் காதலி மற்றும் அவரது தாயாரை காதலன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள வசுந்தரா என்க்ளேவ் என்னும் அப்பார்ட்மெண்டில் வசித்துவந்தவர்கள் சுமிதா மேரி மற்றும் அவரது மகள் சமிர்தா (25). சமிர்தா விக்ராந்த் என்ற நபரை காதலித்துவந்துள்ளார். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமிர்தா விக்ராந்தை பிரிந்து வந்ததாகவும், அதன்பின்னர் வேறொரு இளைஞரை காதலித்தாகவும் கூறப்படுகிறது.

இதனால் தனது காதலியை பழிவாங்க நினைத்த விக்ராந்த், தனது நண்பர் பிரயாக் என்பவருடன் சமிர்தாவின் வீட்டுக்கு வெளியே நின்றுள்ளார். சம்பவத்தன்று இரவு சமிர்தா தனது காரில் இறந்து இறங்கி வீட்டுக்கு செல்ல, விக்ராந்த் தனது நண்பனுடன் சேர்ந்து சமிர்தாவை பின் தொடர்ந்து சென்றது அப்பார்மெண்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Crime

இந்நிலையில், அடுத்தநாள் காலை சமிர்தாவின் வீட்டில் வேலை செய்யும் பெண் வழக்கம்போல் வீட்டு வேலைக்கு வந்த நிலையில் சமிர்தாவின் வீடு கதவு பூட்டப்பட்டுள்ளது. நீண்ட நேரமாக கதவை தட்டியும், யாரும் திறக்கவில்லை என்பதால் வேலைக்கார பெண் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சமிர்தாவின் வீட்டு கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்ததில் சமிர்தாவும், அவரது தாயாரும் இரத்த வெள்ளத்தில் உயிர் இழந்து கிடந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் CCTV காட்சிகளை ஆதாரமாக கொண்டு விக்ராந்த் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.