இனிப்பகத்திற்குள் தறிகெட்டு புகுந்த கார்; 6 பேர் படுகாயம்.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்.!

இனிப்பகத்திற்குள் தறிகெட்டு புகுந்த கார்; 6 பேர் படுகாயம்.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்.!


Delhi Rajpur Road Accident 


டெல்லியில் உள்ள ராஜ்பூர் ரோடு பகுதியில், கசோரி எனப்படும் இனிப்பு விற்பனை செய்யும் கடை உள்ளது. மார்ச் 31ம் தேதியன்று, கடைக்கு வெளியே 20 க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பிடித்த உணவுகளை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். 

அச்சமயம், பராக் மைனி என்ற நபர் இயக்கி வந்த கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது. இந்த சம்பவத்தில் கடையில் இருந்த நபர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். 

இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை எனினும், 6 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வாகனத்தை இயக்கிய மைனி என்ற நபரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விபத்து குறித்த அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.