இந்தியா

நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன..? கேள்வி கேட்ட சிறை நிர்வாகம்..!

Summary:

Delhi nirphaya murder case update

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்குகளில் ஓன்று டெல்லியை சேர்ந்த இளம் பெண் நிர்பயாவின் கொலை வழக்கு. கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 8 வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கில் நான்கு குற்றவாளிகளும் தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நான்கு பேருக்கும் தூக்கு உறுதியாகியுள்ள நிலையில் அவர்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்டு சிறை நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூக்கிலிடப்படும் முன் கடைசியாக யாரை சந்திக்க விரும்புகிறீர்கள்? மதம் சம்மந்தமான புத்தகங்களை வாசிக்க விரும்புகிறீர்களா? உங்கள் பெயரில் ஏதேனும் சொத்து இருந்தால், அந்த சொத்துக்களை யாருக்கேனும் வழங்க விரும்புகிறீர்களா? போன்ற கேள்விகளை சிறை நிர்வாகம் எழுப்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Advertisement