டெல்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு... ஆம்ஆத்மி, பாஜகவினர் அமளி...!

டெல்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு... ஆம்ஆத்மி, பாஜகவினர் அமளி...!


Delhi Mayor election postponed again... Aam Aadmi Party, BJP's Amali...

பாஜகவினர் ஆம் ஆத்மி அமலியில் ஈடுபட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு. 

டெல்லி மாநகராட்சி‌தேர்தல் கடந்த மாதம் 4-ஆம் தேதி நடந்தது. 7-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இது மூன்று மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தல். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 

104 இடங்களில் மட்டுமே பாரதிய ஜனதா கட்சிவென்றது. 9 இடங்களை காங்கிரஸ் கட்சி பிடித்தது. இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி டெல்லி மாநகராட்சி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க இருந்தது. 

இந்த நிலையில் பத்து மூத்த உறுப்பினர்களுக்கு முதலில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தி அமளியில் ஈடுபட்டதால் அப்போது மேயர் தேர்தல் நடைபெறாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மீண்டும் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக டெல்லி மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சபையில் கவுன்சிலர்களும், நியமன உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். 

அதைத்தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு பா.ஜ.க. கவுன்சிலர்கள் இருக்கையில் இருந்து எழுந்து, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இருந்த இடங்களுக்குச் சென்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் இருதரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதையடுத்து, கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பா.ஜ.க. கவுன்சிலர் சத்யசர்மா, சபையை ஒத்திவைத்தார். இதைத் தொடர்ந்து மேயர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது.