இந்தியா

ஹலோ... போலீசா?? நான் அவரை கொலைசெய்ய போறேன்.. கட்டுப்பாடு அறைக்கு வந்த போன் கால்.. விசாரித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Summary:

எப்போது பார்த்தாலும் அப்பா திட்டிக்கொண்டே இருக்கிறார் என்ற காரணத்திற்காக இளைஞர் ஒருவர் செய

எப்போது பார்த்தாலும் அப்பா திட்டிக்கொண்டே இருக்கிறார் என்ற காரணத்திற்காக இளைஞர் ஒருவர் செய்த செயல் போலீசாரை பதரவைத்துள்ளது.


டெல்லி காவல் துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் பிரதமர் மோடியைத் தான் கொல்லப்போவதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.

இதைக் கேட்டுப் பதறிப்போன கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிகள் உடனே மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அலெர்ட்டான டெல்லி காவல்துறையினர், கட்டுப்பாடு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை கண்டறிந்து விசாரணையை தொடங்கினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அது கஜூரி ஹாஸ் பகுதியிலிருந்து வந்தது என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அந்த பகுதிக்குச் சென்ற போலீசார், அந்த பகுதியைச் சேர்ந்த சல்மான் என்று அழைக்கப்படும் அர்மான் என்ற இளைஞரை கைது செய்தனர்.

பின்னர், அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்தான் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு அழைத்து பிரதமருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. மேலும் அதற்கான காரணம் குறித்து அந்த இளைஞர் கூறியதை கேட்ட போலீசார் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். வீட்டில் தந்தை அடிக்கடி திட்டிக் கொண்டே இருப்பதால் அதில் இருந்து தப்பிக்க தான் சிறை செல்வதற்காக இவ்வாறு செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட போலீசார் மிகவும் கோபத்துடன் சந்தேகம் அடைந்து மேற்கொண்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த இளைஞர் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தபோது அவர் போதையில் இருந்ததும், மேலும் கைதான இளைஞர் ஏற்கெனவே கொலைக் குற்றத்திற்காகச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் இந்த விவகாரத்தில் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? இளைஞருக்குப் போதைப் பொருள் எங்கிருந்து வந்தது என்பது குறித்துக் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Advertisement