பதறவைக்கும் வீடியோ காட்சி.. பைக் மீது ஸ்கூட்டர் உரசிய தகராறில் இருவர் குத்தி கொலை...

பதறவைக்கும் வீடியோ காட்சி.. பைக் மீது ஸ்கூட்டர் உரசிய தகராறில் இருவர் குத்தி கொலை...


delhi-man-stabbed-two-over-bike-cross-issue

டெல்லியில் பைக் மீது ஸ்கூட்டர் உரசியதால் ஏற்பட்ட மோதலில் இருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி உத்யோக் விஹார் மெட்ரோ நிலையம் அருகே ஒருவர் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த ஸ்கூட்டி ஒன்று உரசியதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின் கைகலப்பாக மாறியுள்ளது.

இந்நிலையில் பைக்கில் வந்த இருவரில் ஒருவன், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ஸ்கூட்டியில் வந்த இருவரையும் கத்தியால் பலமுறை குத்தி, அவர்கள் இருவரும் இரத்த வெள்ளத்தில் சரிந்ததை அடுத்து பைக்கில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகியிருந்தநிலையில் சிசிடிவி காட்சியை ஆதாரமாக கொண்டு போலீசார் ஒரு சிறுவன் உட்பட இருவரை பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.