கடன் தொல்லை அதிகரித்ததால் மனைவி, மகனை கொலை செய்து மளிகைக்கடை உரிமையாளர் தலைமறைவு..!

கடன் தொல்லை அதிகரித்ததால் மனைவி, மகனை கொலை செய்து மளிகைக்கடை உரிமையாளர் தலைமறைவு..!


delhi-man-killed-wife-and-son-due-to-debt-issue

மளிகை கடை உரிமையாளருக்கு கடன் தொல்லை அதிகரித்த காரணத்தால், மனைவி - மகனை கொலை செய்து தலைமறைவான பயங்கரம் நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள ஹத்தாரா, கீதா காலனியை சேர்ந்தவர் சச்சின். இவரின் மனைவி கச்சான் அரோரா (வயது 35). தம்பதிகளுக்கு 15 வயதுடைய மகன் இருக்கிறார். இவர்கள் அனைவரும் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சச்சின் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டதாக குடும்ப வாட்சப் குரூப்பில் தகவல் பதிவிட்டு மாயமாகியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உள்ளூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

delhi

தகவலை அறிந்து சச்சினின் வீட்டிற்கு வந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, கச்சான் அரோரா மற்றும் அவரின் மகன் பிணமாக இருப்பதை கண்டுள்ளனர். இருவரின் உடலையும் மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சச்சின் மளிகை கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடன் வாங்கியதாக தெரியவருகிறது. கடன் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மனைவி மற்றும் மகனை கொலை செய்து தலைமறைவாகியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.