இந்தியா

டெல்லியில் புதிய வாகனங்களை வாங்கி ஓட்ட கூச்சப்படும் பெண்கள்.! நம்பர் பிளேட்டுகளில் பதிவு எண் அப்படி.!!

Summary:

டெல்லியில் புதிய வாகனங்களை வாங்கி ஓட்ட கூச்சப்படும் பெண்கள்.! நம்பர் பிளேட்டுகளில் பதிவு எண் அப்படி.!!

டெல்லியில் தற்போது புதியதாக விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு பதியப்படும் வாகனப் பதிவெண்களால் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.

டெல்லியில் வாகனங்களுக்கு பதியப்படும் வாகனப் பதிவெண்களில் முதலில் வரும் DL எனும் 2 எழுத்துக்கள் டெல்லி மாநிலத்தை குறிக்கிறது. பின்னர் வரும் 2 எண்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மாவட்டத்தை குறிக்கும். அதன் பின்னர் வரும் எழுத்துக்களில் முதல் எழுத்து C என்பது காரையும் S என்பது இருசக்கர வாகனத்தையும் குறிக்கும். அடுத்து வரும் எழுத்து மற்றும் எண்கள் வழக்கமான தொடர்ச்சி எண்களாக இருக்கும். அந்த வரிசையில் தற்போது வந்துள்ள எழுத்துக்கள்தான் சர்ச்சை கிளம்பியுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் ஒரு இளம்பெண்ணிற்கு அவரது தந்தை தீபவாளி பரிசாக ஸ்கூட்டி வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் தற்போது அந்த இளம்பெண்ணால் அந்த ஸ்கூட்டியை  பயன்படுத்த முடியவில்லை. அதற்கு காரணம் அதில் இருந்த பதிவெண்கள்தான் என கூறப்படுகிறது. அந்த வாகனத்தில் உள்ள எண்களை ஒன்றாக சேர்த்து பார்த்தால் எதுவும் தெரியாது. ஆனால் பிரித்துப் படித்தால் எல்லாருமே முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. 

அந்த வாகனத்தில் உள்ள எண்களில் இடையில் உள்ள (sex) எனும் எழுத்துக்கள்தான். அந்த பதிவெண்ணை பார்த்து மற்றவர்கள் கேலி செய்ததால் தனது இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் வீட்டிலேயே நிறுத்தியுள்ளார் அந்த பெண். இதனையடுத்து சம்பந்தப்ட்ட பதிவெண்ணை மாற்றித் தருமாறு அந்த பெண்ணின்  தந்தை இருசக்கர வாகன விற்பனையாளரை அணுகி உள்ளார். ஆனால் இதுபோன்ற எண்கள் கொண்ட வாகனங்கள் டெல்லியில் ஆயிரக்கணக்கில் ஓடுவதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பதிலளித்த டெல்லி போக்குவரத்து ஆணையர், ஒரு வாகனத்திற்கு வழங்கப்பட்ட எண்ணை மாற்றித் தருவது சாத்தியமல்ல என்றும் பதிவெண் வழங்குவதில் வரிசை எண் அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


Advertisement