வேலைவாங்கி தருவதாக நடித்து, 17 வயது சிறுமி பலாத்காரம்.. 60 வயது கிழக்கு காமுகன் அதிர்ச்சி செயல்.! 

வேலைவாங்கி தருவதாக நடித்து, 17 வயது சிறுமி பலாத்காரம்.. 60 வயது கிழக்கு காமுகன் அதிர்ச்சி செயல்.! 


Delhi Ex Intelligence Bureau Officer Raped 17 Aged Minor Girl Karol Bagh Area Hotel

17 வயது சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக நடித்த 60 வயது முதியவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில், 60 வயதுடைய முன்னாள் உளவுத்துறை அதிகாரி வசித்து வருகிறார். இவரிடம் 17 வயது சிறுமி குடும்ப சூழ்நிலை காரணமாக ஏதேனும் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். 

இதனையடுத்து, கட்டாயம் வேலை வாங்கி தருகிறேன் என்று சிறுமிக்கு வாக்குறுதி அளித்த முதியவர், அப்பகுதியில் செயல்பட்டு வரும் பிரதான விடுதியில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். நேற்று சிறுமியை நேரில் வரச்சொல்லியுள்ளார். 

delhi

சிறுமியும் வேலை கிடைத்துவிடும் என்று புறப்பட்டு சென்ற நிலையில், விடுதி அறைக்குள் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, இன்று காலை கரோல் பாக் நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கவே, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகார் தொடர்பான தகவலை அறிந்த காமுகன் தலைமறைவாகி இருக்கிறான். அவனை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.