இந்தியா Covid-19

கொரோனா பயம்: மாரடைப்பால் இறந்தவரின் உடலை தள்ளுவண்டியில் கொண்டுசென்ற அவலம்.! வைரல் வீடியோ.!

Summary:

Dead body carried by pushcart over corona fear

தூக்கத்தில் இறந்தவரின் உடலை கொரோனா பயம் காரணமாக யாரும் அடக்கம் செய்ய யாரும் வராத நிலையில் இறந்தவரின் உடல் தள்ளுவண்டியில்வைத்து எடுத்துச்சென்று அடக்கம்செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மக்கள் மத்தியில் அதன் மீதான பயம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அத்தாணி நகர் பகுதியை சேர்ந்த சதாசிவ் ஹிராட்டி  நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் நேற்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் செருப்பு தைத்துக்கொடுக்கும் வேலை பார்த்துவந்துள்ளார். இதனால் அவருக்கு கொரோனா ஏற்பட்டு இறந்திருப்பாரோ என அஞ்சிய அந்த பகுதி மக்கள் அவரது உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை.

உறவினர்களும் மறுத்துவிட்ட நிலையில் வேறு வழியில்லாமல் அந்த பெண் தனது மகனுடன் சேர்ந்து இறந்தவரின் உடலை பழம் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச் சென்று மயானாத்தில் அடக்கம் செய்தனர். தள்ளுவண்டியில் வைத்து உடலை எடுத்துச்சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement