இந்தியா

மது அருந்திவிட்டு தாயை தாக்கியதால் தந்தையை கொன்ற 16 வயது மகள்! போலீசாரிடம் அவரே கூறிய பரபரப்பு வாக்குமூலம்.!

Summary:

மது அருந்திவிட்டு தாயை தாக்கியதால் தந்தையை 16 வயது சிறுமி தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தை சேர்ந்த நபர், மனைவி, மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இரண்டு பிள்ளைகளை பெற்ற அந்த தந்தை வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு, குடும்பத்தினருடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

அவர்களது தந்தை வேலை ஏதும் செய்யாமல் குடித்துவிட்டு திரிந்ததால் அவரது மூத்த மகனின் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனால் அந்த பிள்ளைகளின் தந்தை செயல் அவர்களது குடும்பத்திற்கு பெரும் பாரமாகவே அமைந்துள்ளது. இந்தநிலையில் அந்த தந்தை வழக்கம்போல் கடந்த புதன்கிழமையன்றும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து அவரது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

பிள்ளைகள் எவ்வளவோ தடுத்தும் அவர்களது தந்தை பொருட்படுத்தவில்லை. இதனை பொறுத்துக்கொள்ளாத அவரது மகள் 16 வயது சிறுமி, துணி துவைக்கும் மட்டையை வைத்து, தந்தையை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து அந்த சிறுமி தானாக முன் வந்து காவல்துறையில் சரணடைந்து நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர் 18 வயது நிறைவடையாதவர் என்பதால், சிறார் சிர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். தந்தையின் மது பழக்கத்தால், மகளின் வாழ்க்கை சீரழிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement