இந்தியா

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை! 10 ஆம் வகுப்பு மாணவியின் கொடூரச்செயல்! அனைவரையும் பதறவைத்த சம்பவம்!

Summary:

daughter killed her father

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் ஜெய் குமார். இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தார்.  இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது மகளுக்கும் அப்பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவி பிரவீன் உடன் கடைக்கு சென்றுள்ளார். இந்த விஷயம் மனைவியின் தந்தை ஜெய்குமாருக்கு தெரியவந்தது. இதனால் தன மகளை கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த மாணவி, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து வெளியில் செல்வதற்கு தனது அப்பா தடையாக இருக்கிறார். இதனால் அவரை கொலை செய்துவிட்டால் தான் நாம் சுதந்திரமாக இருக்கமுடியும் என அவரது  ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். 

மாணவியின் நண்பனும், நாம் அவ்வாறு செய்தால் தான் சந்தோசமாக இருக்கலாம் என கூறி கொலை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளான். இந்தநிலையில் ஜெயக்குமாரை கொலை செய்ய சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் மாணவி. இந்தநிலையில் பாண்டிச்சேரியில் உள்ள உறவினரின் திருமண விழாவிற்கு ஜெய் குமார் தனது மனைவி மற்றும் மகனை ரயில் மூலம் அனுப்பி வைத்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்தார்.

வீட்டில் ஜெய் குமார் தனியாக இருந்தபோது அவரது மகள் தந்தைக்கு தூக்க மாத்திரை கலந்த பாலை கொடுத்துள்ளார். ஜெய் குமாரும் அதை அப்படியே வாங்கி குடித்துள்ளார். இதனையடுத்து ஜெயக்குமார் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரின் மகள் ஆன் நண்பருடன் சேர்ந்து கத்தியால் ஜெய்குமாரை சராமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். மேலும், தந்தையை இழுத்துச் சென்று பாத்ரூமில் வைத்து தீ வைத்துள்ளார். 

இதனையடுத்து பாத்ரூமில் இருந்து கருகிய வாடையுடன் புகை வெளியில் வந்ததால், அருகில்  வசித்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் ஜெய் குமார் பிணமாக கிடந்தார்.

பின்னர் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். சிறு வயதிலேயே தனது ஆண் நண்பருடனான தொடர்புக்காக தந்தையை கொன்ற மாணவியை கைது செய்தனர். தொடர்ந்து அவரது ஆன் நண்பரையும் கைதுசெய்தனர்.


 


Advertisement