தந்தைக்கு மது ஊற்றி கொடுத்து, பாவிமகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வெளிவந்த பகீர் உண்மைகள்!!

தந்தைக்கு மது ஊற்றி கொடுத்து, பாவிமகள் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வெளிவந்த பகீர் உண்மைகள்!!


daughter killed father for property

உத்திரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஹர்பால் சிங். 46 வயது நிறைந்த விவசாயியான இவருக்கு சொந்தமாக பத்து ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இவரது மகள் ப்ரீத்தி. அவர் அப்பகுதியில் வசிக்கும் தர்மேந்திர யாதவ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். 

இந்நிலையில் அவர் தனது தந்தையிடம் சென்று தான் ஒருவரை காதலிப்பதாகவும், மேலும் அந்த நிலத்தை தனக்கு எழுதிவைக்குமாறும் கேட்டுள்ளார். இதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ப்ரீத்தி காதலனுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

Murderஇந்த நிலையில் அவர் அப்பாவுடன் சமாதானமாக பேசுவதுபோல சென்று அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்து அவரை மயங்கச் செய்துள்ளார். பின் தனது காதலனை வர சொல்லி தந்தையைக் கொன்று, மரத்தில் தூக்குப் போட்டு கொண்டது போல தொங்க விட்டுள்ளனர். இந்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்த அவர்கள் ஹர்பால் சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் கொலை செய்தது தெரியவந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ப்ரீத்தி மற்றும் அவரது காதலன் சேர்ந்து கொலை செய்ததை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.