இந்தியா

சொந்தமாக 4 வீடு இருந்தும், கோவிலில் பிச்சையெடுத்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை! மருமகளின் உள்ளாடைக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி!

Summary:

Daughter in law killed mother in law for property

மும்பை செம்பூர் பெஸ்டம் சாகர் காலனியைச் சேர்ந்தவர் சஞ்சனா பாடில். 70 வயது நிறைந்த இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவர் கணவரின் சகோதரர் பிள்ளையான தினேஷ் என்பவரை தத்தெடுத்து மகனாக வளர்ந்து வந்தார். சஞ்சனாவிற்கு 4 சொந்தமான அடுக்குமாடி வீடுகள் உள்ளது. அவற்றில் ஒரு வீட்டில் அவர், தனது மகன் தினேஷ் மற்றும் அவரது மனைவி அஞ்சனாவுடன் வசித்து வந்துள்ளார். மேலும் மீதி மூன்று வீட்டை வாடகைக்கு விட்டிருந்துள்ளார்.

மேலும்  4 வீடுகள் இருந்தாலும் சஞ்சனா கோவிலிலும் பிச்சையெடுத்தும் வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் உயிருக்கு போராடிய நிலையில்,  அஞ்சனா தனது மாமியார் சஞ்சனாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மேலும் அவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகவும்  மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் சஞ்சனாவின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில் சந்தேகமடைந்த  மருத்துவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாமியார் சஞ்சனா தனது பணத்தை மறந்து வீட்டில் அங்கங்கு வைத்துவிடுவார். பின்னர் இதுகுறித்து மருமகளிடம் கேட்டு சண்டை போடுவார்.இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அஞ்சனா தனது மாமியார் பெயரில் இருந்த 4 வீட்டையும் தனது பெயரில் எழுதி தருமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த அஞ்சனா கிரிக்கெட் பேட்டால் மாமியாரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர்  பாவாடை நாடா மற்றும் செல்போன் சார்ஜர் கொண்டு அவரது கழுத்தை நெரித்துள்ளார். அதன் பின்னே மருத்துவமனைக்கு கொண்டு வந்து கீழே விழுந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார் என கூறியுள்ளனர்.

மேலும் அவரது உள்ளாடையில் மாமியாரின்  நகைகள் அனைத்தையும் அஞ்சனா  மறைத்து வைத்திருந்ததையும்  போலீசார் கண்டுபிடித்தனர். அதனைத்தொடர்ந்து மருமகள் அஞ்சனா மீது வழக்குபதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement