இந்தியா

கழிவறைக்குள் சென்ற மகள்..! மகளோட அந்த நிலைய கண்டதும் அம்மாவோட உயிர் போன சம்பவம்..! சோகத்தில் முடிந்த புதுமனை புகுவிழா..!

Summary:

Daughter and mother dead in house warming function

கழிவறை சென்ற மகள் அங்கையே மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் மகளின் நிலையை கண்ட தாயும் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தேவரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் வரலட்சுமி மற்றும் வெங்கடேஸ்வரா தம்பதியினர். இவர்களுக்கு சரிதா என்ற மகள் உள்ளார். சரிதாவிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்ட நிலையில் அவர் தனது கணவனுடன் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் புது வீடு ஒன்றினை கட்டிவந்த வரலட்சுமி மற்றும் வெங்கடேஸ்வரா தம்பதியினர் புது வீடு குடிபுகும் நிகழ்ச்சியை நேற்று கோலாகலமாக நடத்தியுள்ளன்னர். இந்த விழாவிற்கு சரிதாவும் வந்துள்ளார். விழாவில் கலந்துகொண்ட அவர் அன்று இரவு புது வீட்டில் தனது பெற்றோருடன் தங்க முடிவு செய்து அங்கையே தங்கியுள்ளார்.

இந்நிலையில் இரவு கழிவறைக்குள் சென்ற சரிதா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டி சரிதாவை கூப்பிட்டபோது அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனால்  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சரிதா பேச்சு மூச்சு இல்லாமல் கழிவறை உள்ளே மயங்கி கிடந்துள்ளார்.

தனது மகளின் நிலையை பார்த்த அவரது தாய் வரலட்சுமி அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை அடுத்து இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தநிலையில் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விழாவில் பங்கேற்க வந்த மகள் இறந்ததும், கூடவே சேர்ந்து அவரது தாயும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement