இந்தியா

சிறுமிகளை பலாத்காரம் செய்த கொடூரர்கள்!. உதவி செய்கிறேன் என கூறி நடந்த கொடூர சம்பவம்!.

Summary:

சிறுமிகளை பலாத்காரம் செய்த கொடூரர்கள்!. உதவி செய்கிறேன் என கூறி நடந்த கொடூர சம்பவம்!.


உத்தரகண்ட் மாநிலத்தில் 11 பேர் கொண்ட கும்பல் சிறுமிகளுக்கு உதவி செய்ய சென்று, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 சிறுமிகள் கடந்த 16ஆம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது சிறுமிகளுக்கு வழியில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

சிறுமிகளில் ஒருவர் உதவிக்கு வருமாறு தனது நண்பரை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் அந்த சிறுமியின் நண்பர் 11 பேரை உதவிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

சிறுமிகள் இருக்கும் இடத்திற்கு சென்ற அவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமிகளை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

பின்னர் அவர்களை மிரட்டி அவர்களிடமிருந்த கைப்பேசிகளையும் பறித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். 

அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கொடூர செயலை செய்த 11 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளுக்கு உதவி செய்வது போல் வந்து கொடுமையை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement