இந்தியா

கல்யாணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் சென்ற இளைஞர்!! அவர் சொன்ன அதிர்ச்சி காரணம்!

Summary:

தனது  திருமணத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கேட்டு நபர் ஒருவர் காவல் நிலையத்தி

தனது  திருமணத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கேட்டு நபர் ஒருவர் காவல் நிலையத்தில் கோரிக்கை வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகோபா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், தனது திருமணத்தின்போது தான் குதிரையில் சவாரி வர ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், தான் குதிரையில் சவாரி வரக்கூடாது என தனது பகுதியில் உள்ள உயர்சாதியை சேர்ந்த சிலர் தன்னை மிரட்டுவதாகவும், அதனால் தனது திருமணத்தில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறி அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அந்த இளைஞரின் தந்தை, போலீஸ் பாதுகாப்புடன் நீங்கள் திருமணம் செய்தாலும், திருமணத்திற்கு பிறகு தமது மகனை கொன்றுவிடுவோம் என மிரட்டல் வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.


Advertisement