இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்! வேகமாக பரவும் கொரோனா பாதிப்பு!



crona increased in india

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகளவில் கொரோனா தடுப்பூசியை (Corona Vaccine) கண்டுபிடிக்க வேண்டும் என விரைவான பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 38,902 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,38,716லிருந்து 10,77,618ஆக உயர்ந்துள்ளது.

corona

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் 543 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273லிருந்து 26,816ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,53,751லிருந்து 6,77,423ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,73,379 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.