கொரோனாவுக்கு மாட்டுச் சாணம், பசுவின் சிறுநீர் சிகிச்சையா..? மருத்துவர்கள் எச்சரிக்கை.!

கொரோனாவுக்கு மாட்டுச் சாணம், பசுவின் சிறுநீர் சிகிச்சையா..? மருத்துவர்கள் எச்சரிக்கை.!



cow-dung-for-covid-19-is-wrong

இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தீவிரமாக பரவி வருவதால், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவின் இந்த 2வது அலையின் தாக்கத்திற்கு நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்தநிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், கொரோனா தொற்றுக்கு எதிர்ப்பு மருந்தாக, மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

cow dung

இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், மாட்டுச் சாணத்தை கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சை செய்வது, வேறு பல நோய்களுக்கு வழிவகுக்கும். மாட்டு சாணம் கொரோனாவுக்கு எதிரான செயல்திறனை கொண்டிருக்கிறது என்பதற்கான அறிவியல் ஆதாரம் எதும் இல்லை. கொரோனா வைரஸ் தொற்றை, தடுப்பூசிகளின் மூலமே கட்டுப்படுத்த முடியும். இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.