தமிழகம் இந்தியா

அந்த மனசுதான் சார் கடவுள்!! தள்ளாத வயதில் சேவை செய்த பாட்டிக்கு வீடு தேடிவந்த அதிர்ஷ்டம்!!

Summary:

விலைவாசி ஏற்றத்திற்கு மத்தியிலும் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று விற்பனை செய்துவந்த கோயம்ப

விலைவாசி ஏற்றத்திற்கு மத்தியிலும் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று விற்பனை செய்துவந்த கோயம்புத்தூர் கமலாத்தாள் பாட்டிக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இட்லி அம்மா என அனைவராலும் பாசத்துடன் அழைக்கப்படுபவர்தான் கோயம்புத்தூர் கமலாத்தாள் பாட்டி. கடும் விலைவாசி உயர்வுக்கு மத்தியிலும் தான் லாபம் பெரும் நோக்கம் இல்லாமல், ஏழை எளிய மக்களின் பசி தீர வேண்டும் என்பதற்காக விறகு அடுப்பு மூலம் இட்லி  சுட்டு, ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று மலிவான விலையில் விற்பனை செய்து வருகிறார் கமலாத்தாள் பாட்டி.

இவரது இந்த சேவை மனப்பான்மை நாடு முழுவதும் வைரலானது. இந்நிலையில் விறகு அடுப்புக்கு பதிலாக இலவச கேஸ் அடுப்பை வழங்கி, பாட்டியின் சேவையை பெருமை படுத்தியது கோயமுத்தூர் பாரத் கேஸ் நிறுவனம்.

அதேபோல் இந்த சேவையை பெரிதுபடுத்தவேண்டும், அதற்காக தனது சொந்த இடத்தை சற்று விரிவு படுத்தி, கடை ஒன்றை அமைத்து தனது சேவையை தொடரவேண்டும் என பாட்டி கூறியிருந்தார். இந்த தகவல் இந்தியாவின் பிரபல தொழிலதிபரான மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் திரு. ஆனந்த் மகேந்திர அவர்களுக்கு தெரியவந்தது.

பாட்டியின் சேவையை குறித்து புகழ்ந்து பேசிய அவர் பாட்டிக்கு விரைவில் இடம் வாங்கி கொடுத்து, அதில் அவருக்கு வீடு கட்டித்தரப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் கமலாத்தாள் பாட்டியின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, அவருக்கு சொந்த வீடு கட்டித்தர ஆனந்த் மஹிந்திரா முன்வந்துள்ளார்.

மஹிந்திரா நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவான மஹிந்திரா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் பாட்டியின் பெயரில் நிலம் வாங்கி, அதில் அவருக்கான வீடு மற்றும் இட்லி கடை ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது.

பாட்டியின் சேவை பெரிதளவில் பேசப்பட்டாலும், அவரது சேவை மனப்பான்மையை உணர்ந்து, அவருக்கு உரிய மரியாதை செலுத்திய ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கும் மக்கள் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.


Advertisement