இந்தியா

தங்கள் ஆசையை நிறைவேற்ற, இளம் பெண்ணை துடிக்க துடிக்க கொலை செய்த காதல் ஜோடி..! பகீர் சம்பவம்..!

Summary:

Couples killed young girl in noida

தங்கள் காதலை நிறைவேற்றிக்கொள்ள காதலனும், காதலியும் சேர்ந்து இளம் பெண் ஒருவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள மொபைல் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்த, சார்ச்சா என்னும் பகுதியை சேர்ந்தவர் பூனம்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து நடந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் வேலைபார்த்துவந்த கபில் என்கிற இளைஞரும், ரூபி ஷர்மா என்கிற இளம் பெண்ணும் சிக்கினர்.

இவர்களிடம் விசாரித்ததில், தங்களது காதலுக்கு ரூபி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், பூனத்தை தனியே அழைத்து சென்று அவரை கொலை செய்து எரித்துவிட்டதாகவும், ரூபித்தான் இறந்துவிட்டார் என காட்டுவதற்காக அந்த இடத்தில் ரூபியின் பொருட்களை போட்டுவிட்டு சென்றதாகவும், ரூபி இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினருக்கு தெரிந்தால் நாங்கள் இருவரும் வேறு எங்காவது சென்று திருமணம் செய்துகொள்ளலாம் என இருந்ததாகவும் அவர்கள் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.

தங்கள் காதலை நிறைவேற்றுக்கொள்ள ஒன்னும் தெரியாத அப்பாவி பெண்ணை இவர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement