இந்தியா

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் வேலை! உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி செய்த கேவலமான காரியம்!

Summary:

Couples cheated 54 members for getting job in british airways

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மார்வின் டிசோசா மற்றும் யெல்லாப்பூரில் வசிக்கும் அவரது காதலி அங்கிதா ராய்கர் இருவரும் சேர்ந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கான பயிற்சி வழங்கப்படும் எனவும் சமூகவலைத்தளங்கள் மற்றும் நண்பர்கள் வாயிலாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.

இதனை நம்பி 50 கும் மேற்பட்டோர் சுமார் 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை அந்த ஜோடியிடம் பயிற்சி கட்டணமாக செலுத்தியுள்ளனர். தாங்கள் இருவரும் குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் ஆள் சேர்ப்பு முகவர்கள் என்று அறிமுகமாக்கியுள்னனர்.

இதனை அடுத்து பயிற்சியில் சேர்ந்த 54 பேரை பெங்களூரில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு வரவைத்து இரவு நேர பயிற்சியும் கொடுத்துள்னனர். சில நாட்களில் உங்கள் பயிற்சி முடிந்துவிட்டதாகவும், நீங்கள் வேலைக்கு செல்லலாம் எனவும் கூறி அதற்கான லெட்டர், சீருடை இவற்றை கொடுத்துள்ளனர்.

கடிதத்தை பெற்ற 54 பேரும் அடுத்த நாள் குறிப்பிட்ட நிறுவதத்தில் வேளைக்கு செல்ல அங்கு சென்றுள்ளனர். அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்களை தொடர்புகொண்டபோது அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.

இதுகுறித்து காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததை அடுத்து சுமார் 74 லட்சத்துடன் மாயமான காதல் ஜோடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Advertisement