கைநிறைய சம்பளம்! சொகுசான வாழ்க்கை! இளைஞரின் வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! அசராமல் அவர் எடுத்த ஆச்சர்ய முடிவு!

கைநிறைய சம்பளம்! சொகுசான வாழ்க்கை! இளைஞரின் வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! அசராமல் அவர் எடுத்த ஆச்சர்ய முடிவு!



corporate-working-man-loss-his-job-and-became-a-daily-w

நாடுமுழுவதும் முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இத்தகைய நிலையில் பலரும் வேலையை இழந்து வருமானமின்றி சாப்பாட்டிற்கே அவதிபடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இடுக்கி மாவட்டம் அடிமாலியைச் சேர்ந்தவர் ராபின் அந்தோனி. எம்பிஏ பட்டதாரியான இவர் மும்பை டெண்டல் கேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் சேல்ஸ் மேனேஜராக பதவி உயர்வுபெற்ற அவர் கை நிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவரது வேலை பறிபோனது.

Daily wageworker

அதனைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு திரும்பிய இவர் தன்னிடம் இருந்த பணங்களை வைத்து இருமாதங்களை ஓட்டியுள்ளார். பின்னர் பணமின்றி சிரமபட்ட அவர், தனது ஈகோவை விட்டு விட்டு, யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என எண்ணி சொந்த ஊரில் சித்தாள் வேலைக்கு சென்றுள்ளார்.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், அவருக்கு  தொடர்ந்து வேலை வந்துகொண்டே உள்ளது. மேலும் நாளொன்றுக்கு அவருக்கு 800 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. அதனைக் கொண்டு அவர் மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவால் வேலையை இழந்து மன உளைச்சலால் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், ராபின் அந்தோணியின் இந்த முயற்சி அனைவருக்கும் பெரும் உதாரணம் ஆகும்.