நாய், பூனைகளிடம் இருந்து கொரோனா பரவுகிறதா..? என்ன சொல்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர்.?

நாய், பூனைகளிடம் இருந்து கொரோனா பரவுகிறதா..? என்ன சொல்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர்.?



Corono will not spread from dog and cat

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.  நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 349 பேரும், ஈரானில் 129 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இந்நிலையில் 7,131 பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவில் இருந்து பாதுகாக்க அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், நாய், பூனை போன்ற விலங்குகளில் இருந்து கொரோனா பரவுகிறது என வதந்திகள் வெளியாகின.

corono

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய சுகாதார நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நாய், பூனை போன்ற விலங்குகளில் இருந்து கொரோனா பரவுகிறது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், செல்ல பிராணிகளை கொஞ்சிவிட்டு, உங்கள் பாதுகாப்பிற்காக கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுங்கள் என கூறியுள்ளார்.