
Corono virus
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது 70 கும் மேற்பட்ட உலக நாடுகளில் வேமகமாக பரவ தொடங்கியுள்ளது. ஈரான், ஜப்பான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகள் இந்த வைரஸ் தாக்குதலால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் இந்த வைரஸ் பரவி தொடங்கியுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் நிறைய பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அனைவரையும் கண்காணித்து வருகின்றனர்.
இதனால் தற்போது டெல்லியில் செயல்பட்டு வரும் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் அறிவிப்புகள் மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement