அறிய வகை கொரோனா தடுப்பு ஜூஸ்..! 150 ரூபாய்க்கு விற்பனை..! விஞ்ஞானிகளுக்கு டஃப் கொடுத்த ஜூஸ் கடைக்காரர்.!

அறிய வகை கொரோனா தடுப்பு ஜூஸ்..! 150 ரூபாய்க்கு விற்பனை..! விஞ்ஞானிகளுக்கு டஃப் கொடுத்த ஜூஸ் கடைக்காரர்.!Corono juice sale in kerala

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட வருகிறது. இதுவரை இந்தியாவில் 2 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் குறித்து இந்திய அரசும் பல்வேறு விழுப்புணர்வுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது. கொரோனா குறித்து வதந்தி பரப்பினாலோ அல்லது தவறான செய்திகளை கூறினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

corono

இந்நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கொரோனா தடுப்பு ஜூஸ் என்ற பெயரில் வடமாநில இளைஞர் ஒருவர் ஜூஸ் தயார் செய்து விற்பனை செய்துள்ளார். இதனை கேள்விப்பட்ட மக்கள் அந்த ஜூஸ் குடிப்பதற்காக அந்த பகுதியில் அலைமோதியுள்ளனர்.

இதனை பார்த்த சிலர், இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜூஸ் தயார் செய்து விற்பனை செய்த நபரை விசாரித்ததில் இஞ்சி, எலுமிச்சை, நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து ஜூஸ் தயார் செய்து அதை கொரோனா வைரஸ் தடுப்பு ஜூஸ் என்ற பெயரில் அவர் விற்றது தெரியவந்தது.

மேலும், ஒரு கிளாஸ் ஜூஸ் ரூ. 150 க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். தவறான தகவலை பரப்பி, பொதுமக்களை நம்ப வைத்த குற்றத்திற்காக அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.