கொரோனா வைரஸை அரக்கனாக சித்தரித்து எரித்து ஹோலி பண்டிகையை கொண்டாடிய மக்கள்! வைரலாகும் வீடியோ.

கொரோனா வைரஸை அரக்கனாக சித்தரித்து எரித்து ஹோலி பண்டிகையை கொண்டாடிய மக்கள்! வைரலாகும் வீடியோ.


corono-holi-festival-mumbai

சீனாவில் உஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இதனால் உலகளவில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.

 இந்த வைரஸால் இந்தியாவில் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரக் குழு மற்றும் மற்றும் மத்திய மாநில அரசுகள் கொரோனோ விழிப்புணர்வு குறித்தும், சிகிச்சை நடவடிக்கைகளையும் தீவிரமாக செய்து வருகிறது. 


இந்நிலையில் நேற்று முதல் வட இந்தியாவில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸால் கொண்டாட்டங்கள் சற்று குறைவாகவே இருந்து வருகிறது. இந்திய பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடத்தில் ஈடுப்படாமல் இருந்து வருகின்றனர். 

மும்பை மக்கள் இந்த ஆண்டு சற்று வித்தியமாகவும், விமர்சையாகவும் கொரோனா வைரஸை ஒரு அரக்கனாக சித்தரித்து அதன் மீது ஊசி போன்ற தீ பந்தத்தை வைத்து எரித்து கொன்று ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.