Breaking: கொரோனாவால் இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..! 6 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன் பேரில் இன்று காலையில் இருந்து மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்துவருகின்றனர். கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும் இந்தியாவிலும் அதிகரித்துவரும் பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகள் சற்று அச்சமடைய செய்துள்ளது.

நேற்றுவரை 5 ஆக இருந்த உயிரிழப்பு சற்றுமுன் 6 ஆக அதிகரித்துள்ளது. பாட்னாவை சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். இந்தியாவில் 60 வயதுக்கு குறைந்த முதல் உயிரிழப்பு இதுவே. மேலும், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போதுவரை 341 ஆக உள்ளது.