இந்தியா Covid-19

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! இந்தியாவில் அசுரவேகத்தில் உயரும் பாதிக்கவர்களின் எண்ணிக்கை..!

Summary:

Corono affected people in india

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி கோரதாண்டவம் ஆடி வருகிறது. இத்தகைய கொடிய வைரஸால் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகள் பெரும் திண்டாட்டம் அடைந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனோ வைரஸ் பரவிய நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1076 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,439 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  337 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவற்றில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2687 பேர், டெல்லியில் 1561, தமிழகத்தில் 1204 பேர், ராஜஸ்தானில் 969 மத்தியபிரதேசத்தில் 730 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் உத்தரப்பிரதேசத்தில் 660, குஜராத்தில் 650, தெலுங்கானாவில் 624 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 


Advertisement