இந்தியா

இந்தியாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா! மாநில வாரியாக பாதிக்கபட்டவர்களின் விவரங்கள் இதோ!

Summary:

Corono affected people counts in india

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அதிகமாகி  கோரதாண்டவமாடி வருகிறது. 
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வைரஸ்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 780003ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை 2549 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் நாட்டிலேயே அதிகம் கொரோனோ பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,922ஆக அதிகரித்துள்ளது.

 

குஜராத்தில் 9,267 பேர்,  தமிழ்நாட்டில் 9,227 பேர், டெல்லியில் 7,998 பேர், ராஜஸ்தானில் 4,328 பேர், மத்திய பிரதேசத்தில் 4,173 பேர், உத்தரபிரதேசத்தில் 3,729 பேர், மேற்கு வங்காளத்தில் 2290பேர்,  ஆந்திராவில் 2137 பேர், பஞ்சாபில் 1924 பேர், தெலுங்கானாவில் 1367 பேர்,  ஜம்மு காஷ்மீரில் 971 பேர், கர்நாடகாவில் 959 பேர், பீகாரில் 940 பேர், அரியானாவில் 793 பேர் ஒடிசாவில் 538 பேர், கேரளாவில் 534 பேர், சண்டிகரில் 187 பேர், ஜார்கண்டில் 173 பேர் கொரோனோவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திரிபுராவில் 155 பேர், அசாமில் 80 பேர், உத்தரகாண்டில் 72 பேர், இமாச்சல பிரதேசத்தில் 66 பேர், சத்தீஸ்கரில் 59 பேர், லடாக்கில் 43 பேர், அந்தமான் நிகோபார் தீவுகளில் 33 பேர், மேகலாயாவில் 13 பேர், புதுச்சேரியில் 13 பேர், கோவாவில் 7 பேர், மணிப்பூரில் 2 பேர், அருணாச்சலப் பிரதேசத்தில்,மிசோரத்தில்,  தாதர் நகர் காவேலி பகுதிகளில் தலா ஒருவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement