ஒரே நாளில் 773 பேருக்கு கொரோனா உறுதி! இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு!

ஒரே நாளில் 773 பேருக்கு கொரோனா உறுதி! இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு!


corono-affected-people-counts-in-india

சீனா வூஹானை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் தற்போது வல்லரசு நாடுகள் உட்பட பல நாடுகளிலும் அசுர வேகத்தில்   பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் நிலையில் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள்  கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல நாடுகளிலும் முழுஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வீட்டிலேயே அனைவரும் தனித்திருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவுவதை தவிர்க்க பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Coronovirus

இந்நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் 773 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டு வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 402 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.