இந்தியா

சீனாவை போலவே இந்தியாவிலும் உருவாகிறது அதிவேக மருத்துவமனை..! மும்பையில் 1000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை அமைக்கும் பணிகள் தொடங்கியது.!

Summary:

Corono 1000 bedded hospital in mumbai

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை இதுவரை இதுவரை 39,980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,323 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு இந்திய அளவில் பாதிப்புகளில் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், வைரஸ் உருவான இடமாக கூறப்படும் சீனாவின் உஹான் நகரில் கொரோனாவுக்காக அதிவேக சிறப்பு மருத்துவமனை 10 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டதுபோல தற்போது மும்பையிலும் 1000 படுக்கை வசதிகள் கொண்ட அதிவேக சிறப்பு மருத்துவமனையை இந்திய அரசு கட்ட முடிவெடுத்துள்ளது.

மும்பையில் உள்ள Bandra Kurla வளாகத்தில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கிவிட்டது.


Advertisement