இந்தியா

கொரோனா எதிரொலி! ஆந்திராவில் விசித்திரமாக நடைப்பெற்ற திருமணம்..! வைரலாகும் வீடியோ.

Summary:

Coronavirus

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நோய் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.

இதுவரை இந்நோயால் 140க்கும் மேற்ப்பட்டவர்களை தாக்கியுள்ளது. இதனால் மக்கள் தங்களது கைகளை நன்கு கழுவ வேண்டும் எனவும் மக்கள் கூடும் பொது இடங்களை தவிர்க்கவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் வழியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவில் ஒரு தம்பதியினருக்கு கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றுள்ளது. அந்த திருமணத்தில் அனைவரும் மாஸ்க்கு அணிந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.


Advertisement