இந்தியா Covid-19

திருமணமான புதுமாப்பிள்ளைக்கு கொரோனா! திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Summary:

corona possitivr for marriage bride

கொரோனாவால் நாட்டிலேயே அதிகம் கொரோனா தோற்று பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில், திருமணத்திற்கு பிறகு மாப்பிள்ளைக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் நிகழ்ச்சியில் பங்கேற்ற 63 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் 22 வயது இளைஞருக்கு 3 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் திருமணத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளது. 

ஆனால் நேற்று அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 63 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பல்கர் மாவட்டத்தில் 1911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 61 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலத்தில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.


Advertisement