இந்தியா

மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றவில்லை - பிரதமர் மோடி அறிவிப்பு.

Summary:

Corona modi

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்நோய் தற்போது இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால் மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது கொரோனா விவகாரத்தில் கட்டுப்பாடுகளை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

மேலும் மக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றி உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். மேலும் வழிகாட்டுதல்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்.  கொரோனா விவகாரத்தில், வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். 


Advertisement